புத்தாண்டு விண்ணப்பம்: "எல்லோர் மனதிலும் அளவில்லா அன்பு பெருகட்டும்"
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
திசை எங்கும் தமிழ் பரப்பி
கொட்டட்டும் போர்ப்பரணி வரலாறு
திகைக்கட்டும் சிங்களத்தின் அகராதி.
“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது. உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே.
அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள். இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்சில் எழுதி வைப்போம்.
வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்”
ஒவ்வொரு புது வருட முதல் நாளும் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்வதிலும், நல்ல காரியங்கள் கைகூட வேண்டும் என்று வாழ்த்துவதும் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று நம்பிக்கை அளிப்பதுமாய் தொடங்குகிறது. அத்துடன் என்னவெல்லாம் இந்த வருடத்தில் செய்யப்போகின்றோம் என்ற பட்டியலும் ஒவ்வொரு புது வருட முதல் நாளில் சேர்ந்து கொள்கிறது.
என்றும் சக மனிதர்களிடம் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் வெளிப்படுத்துவது போல இருந்தாலும், இரண்டாவதாக நாம் செய்து கொள்ளும் புது வருட சிந்தனைகள், ஏறக்குறைய நாளையில் இருந்து எந்த தீய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று மனைவியிடம் சத்தியம் செய்யும் குடிகாரன் மனநிலையில் செய்வது போலத்தான் இருக்கிறது.
இந்த வருடமாவது அது மாறுமா..?
நம்பிக்கையும் அன்பும் மட்டுமே மனிதத்தின் இன்றைய அத்தியாவசியங்கள். அது இரண்டும் எல்லோர் மனதிலும் அளவில்லாமல் பெருகட்டும். அடக்கு முறையாலும், அதிகார போதையாலும் அவதிப்படாத ஓர் உலகை இந்தப் புது வருடம் காணட்டும்.
நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
#தமிழீழம் #தலைவர் #பிரபாகரன் #விடுதலைப்புலிகள் #தமிழ்த்தேசியம் #மாவீரர்
0 Comments